எம்மைப்பற்றி

தமிழர்களாகிய நாம் புலம்பெயர்ந்து இன்று உலகம் முழுவதும் பரந்து வாழ்கின்றோம். நாம் வாழுகின்ற பல்லின நாடுகளில் - பன்மொழிச் சூழலில் தமிழனின் தனித்தன்மையையும்,  தமிழ்மொழியின் சிறப்பையும் நிலைநிறுத்த வேண்டிய கடப்பாடு எமக்கு உண்டு. எமது மொழி,கலை, பண்பாடு முதலான விழுமியங்களை பேணிப்பாதுகாப்பதோடு இளையவர்களுக்கு அவற்றைக் கடத்தும் பாரிய பொறுப்பு ஒவ்வொரு தமிழருக்கும் இருக்கிறது. இப்பாரிய பணியை முன்னெடுப்பதற்காக சர்வதேச ரீதியில் பல்துறைசார் நிபுணர்களின் ஒருங்கிணைப்பில், புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்க்கல்விக்கழகங்களுடன் இணைந்து,   உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பே அனைத்துலகத்  தமிழர் கல்வி  மேம்பாட்டுப் பேரவை ஆகும்.  புலம்பெயர் நாடுகளில் பொதுவான தமிழ்மொழிக்கல்வியை நடைமுறைப்படுத்துவதும், அதனூடாக எதிர்காலத்தில் தமிழ்மொழிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதுமே  எமது இலக்காகும்.  இதற்காக ஈழத்து துறைசார் வல்லுநர்களுடன் இணைந்து அனைத்துலக புலமையாளர்களால் உருவாக்கப்பட்ட பாடநூல்கள் புலம்பெயர் நாடுகளில் தமிழை தழைத்தோங்கச் செய்யும் என்பதில் எமக்குச் சந்தேகம் இல்லை. பொதுவான தமிழ்மொழிக் கல்வியூடாகவே எதிர்காலங்களில்  பல்கலைக்கழகப் பட்டப்படிப்புகளும் , ஆய்வுகளும், சர்வதேச அங்கீகாரமும் சாத்தியம். எனவே தமிழர்களாகிய நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோமானால் எம் மொழியையும் தமிழர் என்ற அடையாளத்தையும் தக்க வைத்துக்கொள்ள முடியும். 

பாடநூல்கள்